search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி மேல்முறையீடு மனு மீது 21-ந்தேதி விசாரணை
    X

    ராகுல் காந்தி மேல்முறையீடு மனு மீது 21-ந்தேதி விசாரணை

    • 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
    • வரும் 21-ந்தேதி ராகுல் காந்தி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

    மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.

    சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

    இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

    மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், வரும் 21-ந்தேதி ராகுல் காந்தி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

    Next Story
    ×