என் மலர்
இந்தியா

KKR அணியில் வங்கதேச வீரர்... ஷாருக்கானை துரோகி என விமர்சித்த உத்தவ் சிவசேனா!
- வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
- ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என த்தவ் சிவசேனா கட்சி கடுமையாகச் சாட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
இதுகுறித்து பேசிய உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே, "வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும். ஷாருக்கான் வங்கதேச வீரரை விளையாட வைத்தால் அதனால் அவருக்கு கிடைக்கும் பணம் பயங்கரவாதத்தை வளர்க்கவும், நமது நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டவும் பயன்படுத்தப்படும். எனவே நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துரோகிகளை நாட்டுக்குள் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை கேட்போம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சங்கீத் சோம், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என்று கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.






