என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து 16 நாள் பேரணியை தொடங்கிய ராகுல் காந்தி!
    X

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து 16 நாள் பேரணியை தொடங்கிய ராகுல் காந்தி!

    • 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • வாக்கு திருட்டுக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது

    நிதிஷ் குமார் தலைமை யில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்தநிலையில் பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    வாக்கு திருட்டுக்கு எதிராகவும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதி யில் தொடங்கிய யாத்திரை 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20 மாவட்டங்கள் வழியாக செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் முடிவடையும்.

    இதற்கிடையே பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    Next Story
    ×