என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவையில் பேச எனக்கு அனுமதி மறுக்கிறார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    மக்களவையில் பேச எனக்கு அனுமதி மறுக்கிறார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    • மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேச கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு ஏற்கவில்லை.
    • திர்க்கட்சி தலைவரை முடக்க பார்க்கிறார்கள். அவரை பேச அனுமதிக்க வேண்டும்

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டு கோள் விடுத்து இருந்தது.

    ஆனால் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர், டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து அனைத்து விவாதத்துக்கும் தயார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    இதையடுத்து 10.45 மணிக்கு எம்.பி.க்கள் வரத் தொடங்கினார்கள். 11 மணிக்கு பாராளுமன்றம் தொடங்கியது. முதலில் அகமதாபாத் விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு வழக்கமான அலுவல்கள் நடைபெற்றன.

    அப்போது எதிர்க்கட்சி கள் எழுந்து பகல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை சபைக்கு தருமாறு கூறினார்கள்.

    ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நிகழ்ச்சி தொடங்கிய 20 நிமிடங்களில் ஒத்தி வைக்கப் பட்டது. 12 மணிக்கு மீண்டும் சபை கூடும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

    12 மணிக்கு மீண்டும் சபை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. சபாநாயகர் கோரிக்கைகளை எதிர்க் கட்சி எம்.பி.க்கள் ஏற்க வில்லை.

    இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியில் வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேச கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேச அனு மதி கேட்டேன்.

    ஆனால் எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. திட்டமிட்டு நான் பேச அனுமதி மறுக்கிறார்கள். நான் தொடர்ந்து மக்களுக் காக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது பிரியங்கா நிருபர்களிடம் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவரை முடக்க பார்க்கிறார்கள். அவரை பேச அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×