என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

நிலையற்ற பிரதமர் போட்டியாளர்: நிதிஷ்குமாரை குறிவைத்து பெங்களூருவில் போஸ்டர்கள்

- பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
- போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அவரது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதன் 2-வது நாள் ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பெங்களூருவில் நிதிஷ்குமாரை குறி வைத்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நிலையற்ற பிரதமர் வேட்பாளர் என்று அவரை விமர்சனம் செய்து சுவ ரொட்டிகள் காணப்பட்டது. மேலும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஒரு போஸ்டரில் பீகார் முதல்-மந்திாி நிதிஷ்குமாரை வரவேற்கிறோம். சுல்தான் கஞ்ச் பாலம் நிதிஷ்குமாரின் பரிசு. பாலம் தொடர்ந்து இடிந்து வருகிறது. பீகாரில் உள்ள பாலங்கள் அவரது ஆட்சியை தாங்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை அவர் வழி நடத்துவார் என்று நம்புங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில் நிலையற்ற பிரதமர் போட்டியாளர். நிதிஷ்குமாருக்கு பெங்களூருவில் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த முதல் தேதி ஏப்ரல் 2022. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த 2-வது தேதி ஜூன் 2023 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பகுதி அருகே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நிதிஷ்குமாரை குற்றம் சாட்டும் இந்த சுவரொட்டி கள் முக்கிய போக்குவரத்து சந்திப்பில் காணப்பட்டது.
போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போஸ்டர்களை ஒட்டியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.