என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவியை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை: யாரையும் நம்ப வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
    X

    மாணவியை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை: யாரையும் நம்ப வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை

    • மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா மாவட்டம், கட்வால் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கட்வாலில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். மாணவியிடம் பைக்கில் அழைத்துச் சென்று பள்ளியில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். மாணவியும் இதனை உண்மை என நம்பி அவர்களுடன் பைக்கில் சென்றார்.

    சிறிது தூரம் சென்ற போது வாலிபர்கள் வேறு வழியாக பைக்கை திருப்பி வெறிச்சோடிய பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். இருவரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் காட்வால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பள்ளிக்கு செல்லும் மாணவிகள் யாரையும் நம்பி செல்லக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×