இங்கிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
Published on

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com