என் மலர்tooltip icon

    இந்தியா

    போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் - ராணுவம் பதிலடி
    X

    போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் - ராணுவம் பதிலடி

    • ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.
    • பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிச் சூடு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×