என் மலர்

  இந்தியா

  பாராளுமன்றத்தை முடக்கி ராகுல்காந்தியை ஹீரோவாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
  X

  பாராளுமன்றத்தை முடக்கி ராகுல்காந்தியை ஹீரோவாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
  • காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.

  பகரம்பூர்:

  அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி-சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்நிலையில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரசை மம்தாபானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். முர்ஷிதா பாத் மாவட்டத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் அவர் தொலைபேசியில் தொண்டர்களிடம் கூறியதாவது:

  ராகுல்காந்தியில் கருத்தால் பாராளுமன்றத்தை முடக்கி அவரை ஹீரோவாகும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுகிறது. தனது சொந்த நலனுக்காக பா.ஜனதா அப்படி செய்கிறது. ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.

  பா.ஜனதாவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள காவி முகாம் முன் ஒரு மறைமுகமான புரிதலுடன் அந்த கட்சி இருக்கிறது.

  காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.

  இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியதாக திரினாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×