என் மலர்
இந்தியா

ஆணாதிக்க கல்யாண் பானர்ஜி.. குடும்பத்தை உடைத்த மஹுவா.. வார்த்தைப் போரில் இறங்கிய மம்தா கட்சி எம்.பி.க்கள்
- மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்!
- ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்!
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த சமீபத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
ஜூன் 25 அன்று 24 வயது சட்ட மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
"ஒரு சில ஆண்கள் இந்த வகையான குற்றங்களைச் செய்கிறார்கள்.. ஆனால் ஒரு நண்பன் தன் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பணியில் இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும், கட்சிக்கு எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறி, திருணாமுல் காங்கிரஸ் கட்சி உடனடியாக தனது சமூக ஊடகப் பதிவில் விளக்கம் அளித்தது.
இந்த சூழலில் கல்யாண் பானர்ஜியின் கருத்துக்களை மஹுவா மொய்த்ரா கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆணாதிக்கம் கட்சிகளைக் கடந்து பரவி வருகிறது.
யாராக இருந்தாலும் இந்த அருவருப்பான கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது" என்று பதிவிட்டார்.
மஹுவா மொய்த்ராவின் இந்தக் கண்டனத்திற்குப் பிறகு, கல்யாண் பானர்ஜி அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கினார்.
"மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்! அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார் - ஆனால் அவர் யார்? அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது மனிதரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்! அவர் மிகவும் பெண்களுக்கு எதிரானவர்.
அவர் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த வார்த்தை போர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.






