என் மலர்
இந்தியா

அனைவரும் நிதியுதவி செய்ய கேரள முதல்வர்- கவர்னர் வேண்டுகோள்
- வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும்.
கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் துரிதப்படுத்தி உள்ளார். மேலும் அவர் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உதவவேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story






