search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவர்கள் சொல்வதெல்லாம் பொய்: சித்தராமையா
    X

    அவர்கள் சொல்வதெல்லாம் பொய்: சித்தராமையா

    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன்.

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    Next Story
    ×