என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்க நிறுவனத்திடம்  லஞ்சம் பெற்ற இந்திய அதிகாரிகள்.. HAL, தெற்கு ரெயில்வே ஒப்பந்த முறைகேடு அம்பலம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற இந்திய அதிகாரிகள்.. HAL, தெற்கு ரெயில்வே ஒப்பந்த முறைகேடு அம்பலம்

    • HAL நிறுவனத்திடம் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் மூக் இங்க் பெற்றது.
    • இந்தியா, UAE மற்றும் துருக்கி நாட்டு அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது.

    இந்தியாவில் HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களைப் பெற, அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனமான மூக் இங்க் [Moog Inc] ரூ. 4.2 கோடி லஞ்சம் கொடுத்தது ஆதாரங்களுடன் அம்பலப்பட்டுள்ளது.

    மத்திய ரெயில்வேக்கு மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தைப் பெற பெற 2020ல் மூக் நிறுவனம் முயற்சி செய்தது.

    2020-க்கு முன்பு வரை மத்திய ரயில்வேக்கு கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் மூக் நிறுவனம் இல்லாத நிலையில் ஒப்பந்த தொகையில் 10% கமிஷன் தருவதாக இடைத்தரகர் மூலம் மூக் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை கைப்பற்றி செப்டம்பர் 2020 இல் மத்திய ரயில்வே ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் சேர்ந்தது.

    மேலும் நவம்பர் 2021 இல் HAL நிறுவனத்திடம் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் மூக் இங்க் பெற்றது. இவைதொடர்பாக அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்தில் நடந்த வழக்கில் மூக் இங்க் நிறுவனம், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டது.

    எனவே அந்நிறுவனத்துக்கு ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க அபராதத் தொகையை 3 மடங்காக [ 300 சதவீதம் அதிகம்] செலுத்தியுள்ளது மூக் இங்க்.

    இதற்கிடையே பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான ஆரக்கள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.

    இந்தியா, UAE மற்றும் துருக்கி நாட்டு அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது. இதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதால் அதற்கு ரூ.193 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    முன்னதாக அதானி நிறுவனம் இந்தியாவில் ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது பிற பொதுத்துறை நிறுவனங்களும் அமெரிக்காவிடம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×