என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்- வீடியோ
    X

    பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்- வீடியோ

    • இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்போம்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்றிரவு முதல் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இந்த நிலையில், ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய காட்சியை வெளியிட்டு இந்திய ராணுவம் கூறியுள்ளதாவது:-

    இந்திய மக்கள் வசிக்கும் பகுதிகளை டிரோன்களை கொண்டு தாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆயுதங்களுடன் பறந்து வந்த பாகிஸ்தானின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்போம் என தெரிவித்துள்ளது.



    Next Story
    ×