search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வளர்ச்சிப் பாதையில் இந்தியா.. மத்திய அரசு குறித்து அதானி சொன்னது என்ன?
    X

    வளர்ச்சிப் பாதையில் இந்தியா.. மத்திய அரசு குறித்து அதானி சொன்னது என்ன?

    • இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்

    இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.

    அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

    ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

    அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம் குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×