search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணியின் பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல: ஜெய்ராம் ரமேஷ்
    X

    இந்தியா கூட்டணியின் பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நாளை நடைபெறும் பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பணமோசடி வழக்கில் (மதுபான கொள்கை) அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

    மேலும் மார்ச் 31-ந்தேதி டெல்லி ராம்லீலாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி நாளை டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இந்த பேரணி பிரதமர் மோடி வீடு இருக்கும் லோக் கல்யாண் மார்க் வரை செல்ல இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான அரசு முடிவுக்கான நேரம் என மெசேஜ் உடன் இந்த பேரணியை நடத்துகின்றனர்.

    இந்த பேரணியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பேரணி தனிநபர் சார்ந்தது அல்ல. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தனிநபர் சார்ந்த பேரணி அல்ல. இது ஒரு கட்சியின் பேரணி அல்ல. 28 கட்சிகள் ஈடுபடுவது தொடர்பானது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து அங்கத்தினரும் கலந்து கொள்வார்கள். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதற்கான செய்தியை இது வெளிப்படுத்தும். இந்த பேரணி ஒரு நபரை பாதுகாப்பதற்கானது அல்ல, அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக" என்றார்.

    இந்த பேரணியில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரண், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெரிக் ஓ'பிரனை் உள்ளிட்ட தலைவரக்ள் இந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×