என் மலர்
இந்தியா

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் உக்ரைனின் NO.1 டீசல் சப்ளையராக மாறிய இந்தியா
- உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% ஆக உயர்ந்துள்ளது.
- 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான NaftoRynok கூறியுள்ளது.
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், உக்ரைனின் டீசல் விநியோகத்தில் இந்தியாவின் பங்கு 10.2 சதவீதமாக உயர்ந்தது. 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Next Story






