என் மலர்tooltip icon

    இந்தியா

    #INDIA உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-வது இடம்
    X

    #INDIA உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-வது இடம்

    • ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.
    • பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது.

    ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, இந்தியா உலகின் 2-வது பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆயுத இறக்குமதியில் உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

    உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதம். இருப்பினும், 2015-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதம். முந்தைய காலகட்டத்தில் இது 51 சதவீதமாக இருந்தது. 2011-15 காலகட்டத்தில் இது 70 சதவீதமாக இருந்தது. ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.

    மறுபுறம், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது. 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 80 சதவீதமாக இருந்தது. 2016-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா (35 சதவீதம்), ரஷியா (17 சதவீதம்) மற்றும் சீனா (14 சதவீதம்) உலகிற்கு ஆயுத சப்ளையர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Next Story
    ×