என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி.யில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய கிராம மக்கள்
    X

    உ.பி.யில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய கிராம மக்கள்

    • சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. ஊருக்குள் சிறுத்தை புகுந்த தகவல் பரவியதால் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அப்போது சிறுத்தை வேகமாக கிராம மக்களை நோக்கி சென்று தாக்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் சிறுத்தையை கட்டைகளால் தாக்கினர். அப்போது சிறுத்தை வேகமாக ஓடி தப்பி சென்றது.




    இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி கிராமத்திற்குள் புகுந்த தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க அங்கு 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராம மக்களை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Next Story
    ×