என் மலர்tooltip icon

    இந்தியா

    100 சித்தராமையாக்கள் வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் செய்யமுடியாது: குமாரசாமி ஆவேசம்
    X

    100 சித்தராமையாக்கள் வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் செய்யமுடியாது: குமாரசாமி ஆவேசம்

    • எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
    • எங்களை நன்றாக நடத்தினால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் தலைவருமான குமாரசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டவட்டமாக, நான் உங்களுக்கு சொல்கிறேன். கேள்வியே இல்லை.

    எங்களை நன்றாக நடத்தினால், எல்லாம் சுமூகமாக நடந்தால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம்.

    100 சித்தராமையாக்கள் எங்களுக்கு எதிராக வந்தாலும் அவர்களால் எங்கள் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அதை சேதப்படுத்த முடியாது.

    நான் காங்கிரசுக்கு முற்றிலும் எதிரானவன். எங்களை எப்படி நடத்துவார்கள், முதல் மந்திரியாக இருந்த என்னை எப்படி நடத்தினார்கள் என தெரியும் என்றார்.

    Next Story
    ×