என் மலர்tooltip icon

    இந்தியா

    ரோட்டில் தள்ளி கர்ப்பிணி மனைவியை செங்கலை கொண்டு கொலைவெறியுடன் தாக்கிய கணவன் - பதறவைக்கும் வீடியோ
    X

    ரோட்டில் தள்ளி கர்ப்பிணி மனைவியை செங்கலை கொண்டு கொலைவெறியுடன் தாக்கிய கணவன் - பதறவைக்கும் வீடியோ

    • அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
    • கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தெலுங்கானாவில் சாலையில் வைத்து, கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

    ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத், தனது 22 வயது மனைவி ஷபானா பர்வீனை குடும்பத்தகராறு காரணமாக கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார்.

    தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவில், பஸ்ரத் தனது மனைவியை நோக்கி ஓடி வந்து தரையில் தள்ளுவதைக் காண முடிந்தது. இதனால் மனைவி நிலைகுலைந்து கீழே விழுகிறார்.

    அதன் பின் அவர் தனது மனைவியை செங்கற்களால் கொலைவெறியுடன் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதலுக்கு பின் கணவர் தனது பைக்கில் அவ்விடத்தை விட்டுச் சென்றார் .

    தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுவரை, பஸ்ரத் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×