என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹனி டிராப் - ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி அதிரடி கைது
    X

    ஹனி டிராப் - ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவாளி அதிரடி கைது

    • பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியுள்ளார்.
    • கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார்

    பாகிஸ்தானின் ISI அமைப்புக்கு உளவு பார்த்ததாக மங்கத் சிங் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது.

    மங்கத் சிங்கிடம் மேற்கொண்ட விசாரணையில், இஷா ஷர்மா என்ற போலி பெயர் கொண்ட பாகிஸ்தானின் பெண் ஏஜென்டின் ஹனி டிராப்பில் மங்கத் சிங் சிக்கியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மங்கத் சிங், பாகிஸ்தான் பெண் ஏஜெண்ட் உடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னும், பின்னும் அல்வார் கண்டோன்மென்ட் பகுதியை மங்கத் சிங் உளவு பார்த்தது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதங்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×