என் மலர்
இந்தியா

திருமண விருந்தில் தெருநாய்கள் - விலங்கு நல ஆர்வலரின் வினோத செயல்
- புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.
பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story






