என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
    X

    இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

    • ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
    • வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    Next Story
    ×