என் மலர்
இந்தியா

சாலையை கடக்க முயன்ற மாணவன் மீது மோதிய அரசுப் பேருந்து - பதறவைக்கும் வீடியோ
- கல்லூரி பேருந்தை பிடிக்க அவசரமாக சாலையைக் கடக்க முயன்றபோது மோதியது.
- அரசுப் பேருந்து வந்து அவர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுந்தார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கல்லூரி பேருந்தை பிடிக்க அவசரமாக சாலையைக் கடக்க முயன்றபோது மாணவர் ஒருவர் மீது அதிவேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் மாணவர் பலத்த காயமடைந்தார்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியில், மாணவர் ஓடிக்கொண்டே சாலையைக் கடக்க முயற்சிப்பதைக் காணலாம். அப்போது முன்னால் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்து வந்து அவர் மீது பலமாக மோதியதில் அவர் கீழே விழுந்தார்.
விபத்து நடந்த உடனேயே, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவரைத் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story