என் மலர்
இந்தியா
பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.
டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், திருச்சி சிவா, ஆ.ராசா, கதிர் ஆனந்த், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, துரை வைகோ, சண்முகம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story








