என் மலர்tooltip icon

    இந்தியா

    பொருளாதார புயல் வருகிறது: பிரதமர் மோடி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?- ராகுல் காந்தி
    X

    பொருளாதார புயல் வருகிறது: பிரதமர் மோடி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்?- ராகுல் காந்தி

    • கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார்.
    • தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள்.

    இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முன்னதாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, டிரம்பை கட்டிப்பிடித்தார். இந்த முறை அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? அது எங்கே மறைந்துவிட்டது?

    பிரதமர் மோடி தனது நண்பர் என்று அழைக்கும் ஜனாதிபதி டிரம்ப், நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க மாட்டோம், இந்த முறை நாங்கள் வரிகளை விதிப்போம் என்று அவருக்கு உத்தரவிட்டார். அவரால் (மோடியால்) ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார்.

    அமெரிக்க வரி விதிப்பு மீது மக்களின் கவனம் திரும்பாமல் இருக்க, பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் நாடகம் நடத்தி நள்ளிரவில் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் பொருளாதார புயல் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார். தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள். அவர் எங்கே, அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×