என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? - வெளியான சாட்டிலைட் படங்கள்
- இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிரானா மலைகளைத் தாக்கியதாக கூறப்பட்டது.
ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த மே மாதம் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணு ஆயுத கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதி இருப்பதாக கூறப்படும் கிரனா மலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது ஒரு நிலத்தடி அணு ஆயுத சேமிப்பு வசதியைக் கொண்டதாகவும், 1980-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகள் உள்பட அணு ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான தளமாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிரானா மலைகளைத் தாக்கியதாக வந்த செய்திகளை இந்தியா மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






