என் மலர்
இந்தியா

தொடர்ச்சியான அவமதிப்பு.. இந்தியர்களின் கண்ணியத்தை காக்க தவறிய மோடி - காங்கிரஸ் தாக்கு
- இந்திய மாணவர் ஒருவர் கொடூரமாக தரையில் வீசப்பட்டு, அவரது கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிவைக்கப்பட்ட வீடியோ வைரலானது.
- இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்புகளில் மிக முக்கியமான அம்சம்
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கத் தவறியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவில் நியூ யார்க் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்களால் இந்திய மாணவர் ஒருவர் கொடூரமாக தரையில் வீசப்பட்டு, அவரது கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிவைக்கப்பட்ட வீடியோ வைரலானது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் மோடி பெரும்பாலும் இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தவறிவிடுகிறார்.
வரலாற்றில் முதல் முறையாக, ஒரு வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்காவில் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டாலும் பிரதமர் மோடி அமைதியாக உள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.
இந்தியர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பது பிரதமரின் பொறுப்புகளில் மிக முக்கியமான அம்சம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி உடனடியாக அதிபர் டிரம்பிடம் பேச வேண்டும் என்று அவர் கோரினார்.






