என் மலர்tooltip icon

    இந்தியா

    வடகிழக்கில் தொடர் கனமழை: சிக்கிமில் நிலச்சரிவு.. அசாமில் வெள்ளப்பெருக்கு
    X

    வடகிழக்கில் தொடர் கனமழை: சிக்கிமில் நிலச்சரிவு.. அசாமில் வெள்ளப்பெருக்கு

    • வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மிசோரம் ஆகியவற்றில் கனமழை பெய்து வருகிறது. சிக்கிமில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அங்கு கணிசமான அளவு பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக டீஸ்டா அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில், தலைநகர் கௌஹாத்தி உட்பட அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததால் நேற்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழையானது பெய்து வருகிறது.

    Next Story
    ×