என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்- பிரதமர் மோடி
    X

    பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்- பிரதமர் மோடி

    • எங்களை நோக்கி துப்பாக்கி தோட்டா வந்தால் பதிலடியாக குண்டுகளை வீசி தாக்குவோம்.
    • ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் திருப்பி தாக்குவோம்.

    பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர்," காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்க அதிபரின் தலையீடு வேண்டாம்" என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்.

    எங்களை நோக்கி துப்பாக்கி தோட்டா வந்தால் பதிலடியாக குண்டுகளை வீசி தாக்குவோம்.

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் திருப்பி தாக்குவோம்.

    பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ஒப்படைத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்.

    பாகிஸ்தானுடன் மத்தியஸ்தன் செய்வதற்கு யாரும் வரக்கூடாது. அது தேவையும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×