என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
    X

    வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

    • வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
    • காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் இன்று அதிகாலை வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

    வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சி.ஏ.ஏ. 2019, தகவல் அறியும் உரிமை திருத்த சட்டம், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள், வழிபாட்டு தலங்கள் திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர உள்ளது. இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கிறோம், தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×