என் மலர்
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்- சந்திரபாபு நாயுடு இரங்கல்
- முரளி நாயக் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
- குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை முடிறயடித்தபோது இந்திய வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்துள்ளார்.
வீர மரணமடைந்த முரளி நாயக் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முரளி நாயக் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்காக தனது இன்னுயிரை ஈந்த முரளி நாயக்கிற்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story






