என் மலர்
இந்தியா

ஜனநாயகத்தைக் கொலை செய்த காங்கிரஸ் அதைப் பற்றி பேசலாமா?: பா.ஜ.க. தாக்கு
- தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
- அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
புதுடெல்லி:
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தின் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஷா நவாஸ் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி எத்தனை வரம்புகளைத் தாண்ட முடியும் என்பதற்கான பதிவை உருவாக்கி வருகிறார்.
தேர்தல் ஆணையம் அவர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பொருத்தமான பதிலை அளித்துள்ளது. இதன்பிறகு, அவர் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜனநாயகத்தைக் கொலை செய்த காங்கிரஸ் கட்சி, இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறது.
ராகுல் காந்தி SIR பிரச்சனையில் நாட்டு மக்களைத் தூண்டிவிடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.






