என் மலர்
இந்தியா

பயங்கரவாதத்தை வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது- அமித் ஷா
- இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைகிறோம்.
- பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தி உள்ள ஆபரேஷன் சிந்தூரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.
இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தநொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது.
Next Story






