என் மலர்tooltip icon

    இந்தியா

    கொடி, பிரதமர், அரசியலமைப்பு ஆகியவற்றில் இரண்டு எப்படி இருக்க முடியும்: ஜம்மு-காஷ்மீர் மசோதா விவாதத்தில் அமித் ஷா பேச்சு
    X

    கொடி, பிரதமர், அரசியலமைப்பு ஆகியவற்றில் இரண்டு எப்படி இருக்க முடியும்: ஜம்மு-காஷ்மீர் மசோதா விவாதத்தில் அமித் ஷா பேச்சு

    • மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை இந்திய நாட்டின் பொருளாதார சூழ்நிலை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த மசோதா) ஆகிய மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

    அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சவுகாதா ராய் சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்பு, இரண்டு கொடிகள் எப்படி இருக்க முடியும். இதை செய்தவர்கள், தவறு செய்துள்ளனர். நம்நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம். அதை செய்துள்ளோம்.

    இவ்வாறு அமித் ஷா குறிப்பிட்டார்.

    Next Story
    ×