என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி - வாஷிங்டன் இடையேயான விமான சேவை நிறுத்தம்:  ஏர் இந்தியா அறிவிப்பு
    X

    டெல்லி - வாஷிங்டன் இடையேயான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு

    • அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் விபத்துக்குள்ளானது
    • இந்த விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

    இதனையடுத்து, போயிங் 787 Dreamliner ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

    இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டெல்லி - வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    போயிங் 787 Dreamliner ரக விமானங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ஏற்பட்ட விமான பற்றாக்குறையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×