search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமலாக்கத்துறை காவல் என்ற நீதிமன்ற உத்தரவில் உடன்பாடில்லை: ஆம் ஆத்மி
    X

    அமலாக்கத்துறை காவல் என்ற நீதிமன்ற உத்தரவில் உடன்பாடில்லை: ஆம் ஆத்மி

    • ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி.
    • பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் ஜாமின் கிடைப்பது கடினம்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ஆம் ஆத்மி கட்சி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதிஷி கூறுகையில் "இந்த நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு மரியாதையுடன் உடன்பாடு இல்லை என்பதை பணிவுடன் சமர்ப்பிக்க விரும்புகிறோம். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை.

    அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால், இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலும் ஜாமின் கிடைப்பது கடினமாகும்.

    மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்தது நாட்டின் ஜனநாயக கொலை" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×