என் மலர்tooltip icon

    இந்தியா

    பக்கத்து வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது 5 வயது மகனையே கொலை செய்த சைக்கோ அப்பா
    X

    பக்கத்து வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது 5 வயது மகனையே கொலை செய்த சைக்கோ அப்பா

    • பக்கத்துக்கு வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது மனநிலை சரியில்லாத 5 வயது மகனை ஆற்றில் தள்ளி தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • தனது மகன் கௌரவை கொன்று அந்த பழியை விவேக் மீது போடுவதே தந்தை சஞ்சீவின் பழிக்குப் பழி திட்டம்

    உ.பியில் பக்கத்துக்கு வீட்டுக்காரனை போலீசில் மாட்டிவிட தனது மனநிலை சரியில்லாத 5 வயது மகனை ஆற்றில் தள்ளி தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சாஜகானிபூரில் வசித்து வரும் சஞ்சீவ் என்ற நபர் தனது மகன் கௌரவை பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்களாக விவேக் உட்பட 8 பேர் சேர்ந்து கடத்தி விட்டதாகப் புகார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீஸ் புகார் அளித்த தந்தை சஞ்சீவ்தான் தனது மகனைக் கொன்றதாகக் கண்டுபிடித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சீவின் மகன் கௌரவுடன் விவேக்கின் மகன் ஆயுஷ் சண்டை பிடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆயுஷின் அம்மாவிடம் கூற சென்ற கௌரவின் தாயை [சஞ்சீவின் மனைவியை] விவேக்கின் மனைவி அடித்துள்ளார். தனது மனைவிக்கு நேர்ந்த அவமானத்தால் கோபத்திலிருந்த சஞ்சீவ் விவேக்கை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார்.

    தனது மகன் கௌரவை கொன்று அந்த பழியை விவேக் மீது போடுவதே தந்தை சஞ்சீவின் பழிக்குப் பழி திட்டம். அதனபடி மன நிலை சரியில்லாத தனது 5 வயது மகன் கௌரவை மருந்து வாங்க அழைத்துச்செல்வதாக ஸ்கூட்டரில் ஆற்றோரம் அழைத்துச் சென்று அங்கிருந்து மகனை ஆற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார் தந்தை சஞ்சீவ்.

    கொலையை செய்து முடித்தபின் வரும் வழியில் விவேக் உள்ளிட்ட தனது பக்கத்துக்கு வீட்டாரின் பெயர்களை கத்தியபடியே வந்துள்ளார். சஞ்சீவின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீஸ் அவரிடம் அழுத்தம் கொடுத்து விசாரித்ததில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×