என் மலர்
இந்தியா

ஒடிசா கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து.. தொழிலாளர்கள் பலி - பாறைகளுக்கு அடியில் பலர் சிக்கித் தவிப்பு
- வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
- குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.
இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Next Story






