என் மலர்
இந்தியா

ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி பாலியல் தொல்லை செய்த பாஜக நிர்வாகி
- 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
- ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.
உத்தரகாண்ட மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சால்ட் பகுதியில் தனது சகோதரனுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.
அவரிடம் இருந்து தப்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூறவே அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு போரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
Next Story