search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    2018-19 நிதி ஆண்டில் கார்ப்பரேட், தொழில் நிறுவனங்கள் பா.ஜ.க. - காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய நன்கொடை

    பா.ஜ.க.வுக்கு கார்ப்பரேட், தொழில் நிறுவனங்கள் 2018-19 நிதி ஆண்டில் ரூ.698 கோடி நன்கொடை வழங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.122½ கோடி நிதி அளித்துள்ளன.
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் பெருமளவில் நன்கொடைகளை வாரி வழங்குவது வழக்கமான நடைமுறை ஆகும்.

    அந்தவகையில் 2018-19 நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வழங்கிய நன்கொடைகள் குறித்து வாக்கெடுப்பு உரிமை குழுவான ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து, தகவல்களை வெளியிட்டுள்ளன.

    தேர்தல் கமிஷன் பகிரங்கப்படுத்திய தரவுகளை மேற்கோள்காட்டி இந்த ஆய்வு நடத்தி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்படி, நாட்டிலேயே அதிகளவில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் ரூ.698 கோடியை வாரி வழங்கி உள்ளன. 1,573 கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் இந்த நிதியை அளித்துள்ளனர்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.122½ கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. 122 கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் இதை தந்துள்ளனர்.

    சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 17 கார்ப்பரேட் நன்கொடையாளர்களால் ரூ.11.34 கோடி நன்கொடை தரப்பட்டுள்ளது.

    மொத்தமாக 2018-19 நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை ரூ.876.10 கோடி ஆகும்.

    மொத்த நன்கொடைகளில் ரூ.31.42 கோடி மதிப்பிலான 319 நன்கொடைகளை வழங்கியவர்கள் பற்றிய முகவரி விவரங்கள் பங்களிப்பு படிவத்தில் தெரிவிக்கப்படவில்லை.

    தேசிய கட்சிகள் ரூ.13.57 கோடியை 34 நன்கொடைகள் மூலம் பெற்றதில், வருமான வரி நிரந்தரக்கணக்கு எண் விவரம் பங்களிப்பு படிவத்தில் இடம் பெறவில்லை.
    Next Story
    ×