என் மலர்

  செய்திகள்

  ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு
  X
  ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு

  சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பான வழக்கை 3 எம்எல்ஏக்கள் திரும்பப்பெறுவதாக தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
  புதுடெல்லி : 

  ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தார். 

  அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க் களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை அடுத்து தங்கள மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

  இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  உச்சநீதிமன்றம்
  சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வரும் 30-ம் தேதி திரும்ப பெற உள்ளனர். 

  எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளித்ததை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.
  Next Story
  ×