என் மலர்
செய்திகள்

ராகுல் காந்தியின் அமேதி தொகுதியை இந்த முறை பாஜக கைப்பற்றும் - அமித் ஷா நம்பிக்கை
ராகுல் காந்தி எம்.பி.யாக பதவி வகிக்கும் அமேதி பாராளுமன்ற தொகுதியையும் இந்த முறை பாஜக கைப்பற்றும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #BJPwillwin #AmethiLSpolls #AmitShah
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் கடந்தமுறை ராகுல் காந்தியை எதிர்த்து கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.
வரும் 6-ம் தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் அமேதி நகரில் இன்று திறந்த வாகனத்தில் சென்று ஸ்மிருதி இரானி வாக்கு சேகரித்தார்.
அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, அமேதி பாராளுமன்ற தொகுதியையும் இந்த முறை பாஜக கைப்பற்றும். உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் அமேதி தொகுதி பல வகைகளில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இங்குள்ள மக்கள் இந்திரா காந்தி குடும்பத்தினரை பலமுறை தேர்ந்தெடுத்தும் பல ஆண்டுகாலமாக மின்சார வசதி கிடைக்காத கிராமங்களுக்கும் மோடியின் ஆட்சியில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மோடியின் அரசு மீதும் பாஜகவின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் மக்கள் கூட்டமே சாட்சி. வாரிசு ஆட்சிமுறை ஒழிந்து நாடு முன்னேற வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி அபாரமான பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எல்லாம் மவுனமாக முடங்கிப் போகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #BJPwillwin #AmethiLSpolls #AmitShah
Next Story






