என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும் தந்தை, மோடி பொதுக்கூட்டத்தில் மகன் - கலக்கல் முகேஷ் அம்பானி குடும்பம்
  X

  காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும் தந்தை, மோடி பொதுக்கூட்டத்தில் மகன் - கலக்கல் முகேஷ் அம்பானி குடும்பம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார். #ModiRally #MukeshAmbani #AnantAmbani
  மும்பை:

  ரபேல் போர் விமானம் கொள்முதலில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சலுகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

  அதேவேளையில், பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலின்ட் டியோரா-வை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி சமீபத்தில் வெளிப்படையாக ஆதரித்தார். 

  அவரை ஆதரித்து வாக்களிக்குமாறு முகேஷ் அம்பானி கேட்டுக் கொள்ளும் வீடியோ பதிவை  மிலின்ட் டியோரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாக்கு சேகரிக்கிறார்.

  இந்நிலையில், மும்பை புறநகர் பகுதியான பன்ட்ரா குர்லா காம்பிளக்ஸ் என்ற இடத்தில் இன்றிரவு நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.  மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் அமர்ந்திருந்த முகேஷ் அம்பானியின் மகனான அனன்ட் அம்பானி மோடியின் பேச்சை மிகவும் ரசித்து கேட்டார். 

  பாராளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தந்தை முகேஷ் அம்பானி ஆதரிக்கும்போது இன்று மும்பையில் மோடி பேச்சை அவரது மகன் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்த சம்பவத்தை சில ஊடகங்கள் கேலியாக குறிப்பிட்டுள்ளன. #ModiRally #MukeshAmbani #AnantAmbani
  Next Story
  ×