என் மலர்
செய்திகள்

வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி
உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
லக்னோ:
பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.

வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
Next Story






