என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயநாட்டில் ராகுல்காந்தி, பிரியங்காவை காண திரண்ட தொண்டர்கள்
    X
    வயநாட்டில் ராகுல்காந்தி, பிரியங்காவை காண திரண்ட தொண்டர்கள்

    ராகுல் காந்தி, பிரியங்காவை காண லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்

    ராகுல் காந்தி, பிரியங்காவை காண வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் காணப்பட்டனர். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் 543 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருந்த கேரளாவின் வயநாடு தொகுதி இன்று சர்வதேச ஊடகங்களும் உற்றுப்பார்க்கும் தொகுதியாக மாறிப்போனது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்புக்கு பின் அந்த தொகுதி எங்கிருக்கிறது?, வாக்காளர்கள் விபரம் உள்ளிட்ட தகவல்களை இணையதளங்களில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

    இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் முகாமிடும் தொகுதியாக வயநாடு மாறிப்போனது. ஒரு வாரத்திற்குள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறிய வயநாட்டில் இன்று ராகுல்காந்தி மனு தாக்கல் செய்தார்.

    வயநாட்டில் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய வயநாடு கலெக்டர் அலுவலகம் சென்றார்.

    வயநாடு வந்த ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தார். இவர்கள் இருவரையும் காண இன்று காலை முதலே வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர்.

    கேரளா மட்டுமின்றி வயநாடு தொகுதியையொட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி, கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் தொகுதிகளில் இருந்து காங்கிரசார் வயநாட்டில் குவிந்தனர். இதுபோல கேரளாவின் அண்டை மாவட்டங்களில் இருந்தும் அணி அணியாய் காங்கிரசார் வயநாட்டில் திரண்டனர். பகல் 11 மணிக்கு வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் காணப்பட்டனர்.



    லட்சக்கணக்கில் குவிந்த மக்களால் வயநாடு குலுங்கியது. இதனால் நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    ராகுல்காந்தியை காண காத்திருந்த மக்களும், தொண்டர்களும் கூறும்போது, இந்தியாவில் எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய இந்த அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியதாக வரலாறு இல்லை.

    வயநாட்டில் இன்று கூடிய கூட்டம் இந்த சரித்திர சாதனையை படைத்துள்ளது. இதைப்பார்க்கும் போது ராகுல் காந்தி இந்த தொகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது உறுதி என்றனர். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi #Wayanad



    Next Story
    ×