என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று பேச்சு- யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்
    X

    இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று பேச்சு- யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்

    இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று பேசியது தொடர்பாக யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #YogiAdityanath #EC
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசும் போது, ‘‘காங்கிரசார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குகிறார்.

    இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது. இதுதான் காங்கிரஸ் அரசுக்கும், பா.ஜனதா அரசுக்கும் உள்ள வேறுபாடு என்றார். இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று அவர் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷனில் புகார் அளித்தது.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காஜியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு பிறகு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #YogiAdityanath #EC
    Next Story
    ×