search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் 16 தொகுதிகளில் போட்டி: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
    X

    கேரளாவில் 16 தொகுதிகளில் போட்டி: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. #parliamentelection #congress #oommenchandy

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியும், பிரேமச்சந்திரன் கட்சிக்கு 1 தொகுதியும், மானி காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதை கண்டறியும் கூட்டம் நடந்து வந்தது.

    கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க இப்போது பதவியில் இருக்கும் எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களில் சிலரும் முயற்சி மேற்கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.


    இதுபற்றி உம்மன்சாண்டியிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார், என்று கூறினார்.

    இதற்கிடையே கேரள காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்த முடிவுகள் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாநில நிர்வாகிகள் இன்று பட்டியலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு ராகுல்காந்தியுடன் இறுதி ஆலோசனை நடக்கிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.  #parliamentelection #congress #oommenchandy 

    Next Story
    ×