என் மலர்
செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்குவதாக தேர்தலில் நீங்கள் தந்த வாக்குறுதி என்னவானது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் தந்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசுகள் பதவியேற்ற 10 நாளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.
மோடி கூறிய நல்ல காலம் எங்கே? ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பெரிய மோசடி. பொது மக்களின் பணத்தை மல்லையாவிற்கும், நிரவ் மோடிக்கும் தான் கொடுத்தார்.

பா.ஜ.கவை போல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. யாரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படவில்லை.
உ.பி.யில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்துள்ளது. நாங்கள் அப்படி அல்ல. பீகாரில் லாலு கூட்டணியுடன் முன்வாசல் வழியே காங்கிரஸ் அடியெடுத்து வைத்து சிக்ஸர் அடிக்கும்.
வரும் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய பல்கலைக்கழகத்துக்கான அந்தஸ்து அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகளும், லாலு மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர். #RahulGandhi
Next Story






